நடுவானில் மோதி விபத்துக்குள்ளான விமானங்கள்!

0

அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாநிலத்தில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் மூவர் பலியாகியுள்ளனர்.

Vance Brand விமான நிலையத்துக்கு அருகில் மோதிக்கொண்ட இரண்டு சிறிய விமானங்களும் வெவ்வேறு இடங்களில் விழுந்து நொறுங்கின.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது ஒரு விமானத்தில் இருந்த இருவரும் இன்னொரு விமானத்தில் இருந்த விமானியும் உயிரிழந்தமை உறுதிசெய்யப்பட்டது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இந்நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here