நடுவானில் தீப்பற்றிய விமானம்… பீதியடைந்த பயணிகள்..

0

ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றிய நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள்.

பாரீஸிலிருந்து, பிரான்சின் Perpignan என்ற இடம் நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் சென்றுகொண்டிருந்திருக்கிறது.

ஜனவரி 21 அன்று திடீரென அதன் எஞ்சின்களில் ஒன்று வெடித்திருக்கிறது.

சுமார் இரண்டு மீற்றர் உயரத்திற்கு இறக்கையின் அடியிலிருந்து தீப்பற்றி எரிவதைக் கண்டு பயணிகள் திகிலில் உறைந்திருக்கிறார்கள்.

உடனடியாக, விமானிகள் விமானத்தைத் திருப்பி புறப்பட்ட இடத்துக்கே சென்று விமானத்தைத் தரையிறக்கியுள்ளார்கள்.

அதில் பயணித்த 48 பயணிகளும் உயிர் தப்பிய நிலையில் அவர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்கள்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஞ்சினில் தீப்பிடித்ததாக ஏர் பிரான்ஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here