நடுவானில் செயலிழந்த விமானம்…. விமானியின் அசத்தலான செயல்

0

சைபீரியாவின் Kedrovy பகுதியில் இருந்து Tomsk நகருக்கு செல்லும் வழியில் பயணிகள் விமானத்தில் இரு இயந்திரங்களும் திடீரென்று செயலிழந்துள்ளது.

இதனையடுத்து, துணிச்சலாக செயல்பட்ட 56 வயது விமானி Anatoly Prytkov, ஆள் நடமாட்டமற்ற ஒரு பகுதியில் அவசர தரையிறக்கத்திற்கு முயன்று அதில் வெற்றியடைந்துள்ளார்.

விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளாகிய போதும் அதில் பயணித்த 19 பயணிகளும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இச்சம்பவத்தில் விமானியின் கால் உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பேசிய மாகாண ஆளுநர் Sergei Zvachkin, ஆபத்தான கட்டத்தில் துணிந்து செயல்பட்டுள்ளதுடன், பல உயிர்களை காப்பாற்றிய விமானிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

விமான இயந்திரங்கள் திடீரென்று பனியால் உறைந்துள்ளதால் இந்த சிக்கலுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

ஆனால், விமானி தமது இத்தனை ஆண்டு கால அனுபவத்தை இச்சம்பவத்தில் நிரூபித்துவிட்டார் என பயணிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here