நடுவானில் இரு விமானங்கள் மோதி விபத்து

0

அமெரிக்காவின் டெக்ஸாஸில் விமான கண்காட்சி இடம்பெற்றது.

அதன் போது இரண்டு விமானங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

போயிங் ரக பி-17 என்ற விமானம் ஒன்றும் சிறிய ரக விமானம் ஒன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரண்டு விமானங்களையும் செலுத்தியவர்களின் நிலை இதுவரையில் கண்டறியப்படவில்லை.

அதிகாரிகள் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தவில்லை.

அறிக்கைகளின்படி குறைந்தது 6 பேர் விமானத்தில் இருந்தனர். அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அத்துடன் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று இதன் போது சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here