இந்தியாவில் தமிழகத்தின் சென்னை அண்ணா நகரில் ஒரு பிரபலமான மகளிர் கல்லூரி உள்ளது.
அந்த கல்லூரியில் பல மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 5 ஆம் திகதி ஏப்ரல் தனியார் கல்லூரி மாணவிகள் இருவர் நடு ரோட்டில் தலைமுடியை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்டனர்.
மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து தாக்கிக்கொண்டுள்ளனர்.
அருகில் இருந்த இளைஞர்கள் சிலர் மொபைலில் வீடியோவாக பதிவு செய்தனர்.
. சண்டையிட்ட மாணவிகளை சக மாணவிகள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.
ஆனால், அந்த மாணவிகள் தொடர்ந்து சண்டையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டையிடும்போது தடுக்க வந்த ஒரு மாணவியை மற்றொரு மாணவி அடித்து விரட்டியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது
இவ்வாறு நடு ரோட்டில் நடைபெற்ற இந்த சண்டையின் போது போலீசார் யாரும் வரவில்லை.
பிறகு தாங்களாகவே அவர்கள் விலகி சென்று விட்டனர்.ஷ