நடுக்கடலில் உயிருக்கு போராடிய பெண்ணால் பிரித்தானியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

இங்கிலாந்தை சேர்ந்த Chris Ford என்பவர் காற்று வாங்குவதற்காக தென்மேற்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அந்த கடற்கரையில் பெண் ஒருவர் உயிருக்கு போராடுவது போன்று தெரிந்துள்ளது.

இதையடுத்து இவர் உடனே கடலில் இறங்கி பெண்ணை காப்பாற்ற சென்றுள்ளார்.

தண்ணீரில் நீண்ட தூரம் நீந்தி அந்தப் பெண் உருவத்திற்கு அருகே சென்று பார்த்துள்ளார்.

அப்போது அந்த நபர் காப்பாற்றியது பெண் அல்ல அவர் காப்பாற்றியது பெண் உருவத்தில் உள்ள ஒரு பொம்மை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த பொம்மை தலையில்லாமல் மிதந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து Chris Ford தெரிவிக்கையில், நான் ஒரு பெண் உயிருக்கு போராடுவதாக நினைத்து என் உயிரை கொடுத்து காப்பாற்ற நினைத்தேன்.

ஆனால் இந்த சம்பவம் எனக்கு பேரதிர்ச்சியை கொடுத்ததாக கூறியுள்ளார்.

மேலும் அந்த பொம்மை கப்பலில் கொண்டு வந்து யாரோ ஒருவர் கடலில் போட்ட மாதிரி உள்ளது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here