நடிப்பில் இருந்து ஓய்வு… சமந்தா முடிவுக்குக் காரணம் என்ன?

0

நடிகை சமந்தா கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 11 ஆண்டுகளாக நடித்து வரும் நிலையில் திரை உலகில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடிகை சமந்தா அறிமுகமானார். அதன்பின்னர் அதர்வா நடித்த ’பானா காத்தாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக நடித்த சமந்தா அதன் பின் விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை சமந்தாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் அவர் பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரையுலகில் இருந்து ஒரு சில மாதங்கள் விலகியிருந்து ஓய்வு எடுக்கப் போவதாக சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமந்தா கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் கிளம்பிய நிலையில் தற்போது அவர் ஒரு சில மாதங்கள் ஓய்வு எடுக்கப் போவதாகவும் புதிய திரைப்படங்களின் இப்போதைக்கு நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் என்பதும் அவரது பகுதிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here