நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை: என்ன காரணம்?

0

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பனாமா பேப்பர் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. வெளி நாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்தவர்களின் பட்டியலை தான் பனாமா பேப்பர் என்று கூறுவதுண்டு. இந்த பட்டியலை ஜெர்மனியை சேர்ந்த ஊடகமொன்று வெளியிட்டிருந்த நிலையில் அதில் இந்தியாவைச் சேர்ந்த 500 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அதில் ஒருவர் பிரபல நடிகை ஐஸ்வர்யாராய் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஐஸ்வர்யாராய்க்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த சம்மனுக்கு அவர் ஆஜராகாவிட்டால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரங்கள் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here