நடிகர் விவேக்கின் ஆசை நிறைவேறியதா …?

0

இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 பட ஷீட்டிங்கின்போது,நடிகர் விவேக் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இது வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த படம் இந்தியன்2. இப்படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கடந்தாண்டு இப்படத்தின் ஷூட்டிங்கின்போது ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இப்படம் ஏன் இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படவில்லை ; இந்தியன்2 படத்தில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் எனவே இந்தக் கொரோனா காலத்தில் அவர்கள் இந்தியாவுக்கு வந்து படப்பிடிப்பு நடத்தமுடியவில்லை எனத் தகவல் வெளியானது..

இந்நிலையில் இப்படத்தின் முதன் முதலாக விவேக் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்யபட்டார். அப்போது, இந்தியன் 2 பட ஷுட்டிங்கின்போது, அவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

மேலும், நடிகர் விவேக் நடிகர் கமலுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தார். இப்படத்தில் அவரது ஆசை நிறைவேறிய போதிலும் துரதிஷ்ட வசத்தால் அவர் காலமானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here