நடிகர் விஜய்க்கு சிலை அசத்திய கர்நாடக மாநில ரசிகர்கள்!

0

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் விஜய்யின் முழு உருவச் சிலையை வடிவமைத்து சென்னை கொண்டு வந்துள்ளனர்

சென்னையில் உள்ள விஜய் மக்கள் மன்றத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த சிலை தற்போது வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நிரந்தரமாக அந்த அலுவலத்தில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சிலையை காண்பதற்காக விஜய் ரசிகர்கள் சென்னையின் பல பகுதிகளில் இருந்து பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்றத்தில் அலுவலத்திற்கு சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் விஜய்யின் முழு உருவச் சிலையின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் அந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

vijay-statue-496
vijay-statue

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here