நடிகர் ரஜினிகாந் பட பாடலுக்கு யாழில் இருந்து சென்ற புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான்.!! குவியும் வாழ்த்துக்கள்.!
ஈழத்தமிழர் பெருமை கொள்ளும் தருணம் நடிகர் ரஜினிகாந் நடித்து வெளியாகவுள்ள “அண்ணாத்த” என்ற திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைக்கின்றார்.
அவர் ஒரு பாடலுக்கு நாதஸ்வர இசை வழங்குவதற்காக ஈழத்தில் இருந்து புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனை அழைத்து அவரின் துணைகொண்டு அண்ணாத்த படத்தின் பாடலுக்கு இசையமைத்திருப்பது பெருமைக்குரியது…