இந்தியாவில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் திரைப்படம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது.
புனீத் ராஜ்குமாரின் 47 வது பிறந்தநாள் தினத்தில் 47 ஆட்டோக்களில் அவரது ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், புனீத் ராஜ்குமாரின் படம் வெளியானதையடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள் கூடினர்.