நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

0

தமிழ் திரையுலகில் கடந்த எண்பதுகளில் நவரச நாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக் இன்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இது குறித்து வெளியான அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும், நடிகருமான கார்த்திக் நேற்று இரவு மூச்சுத்திணறலால் சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம் மேற்கொள்ள இருந்தார். அதற்கான தேர்தல் பணிகளில் நேற்று இரவு ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே அவருக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார் நடிகர் கார்த்திக்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இதனையடுத்து திரையுலகினர் பலர் நடிகர் கார்த்திக் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here