நடிகர் அக்‌ஷய் குமாரின் தாய் காலமானார்! – திரைத்துறையினர் அஞ்சலி

0

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் அக்‌ஷய் குமார். கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘சவ்கந்த்’ படம் மூலம் அறிமுகமான இவர், இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிலும் பிரபலமடைந்தார். தற்போது இவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள ‘பெல்பாட்டம்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் அக்‌ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது தாயார் அருணா பாட்டியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவர் மீண்டுவர அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் அக்‌ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அக்‌ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அக்‌ஷய் குமாரின் தாயார் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here