நடமாடும் தடுப்பூசி மையங்களை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை!

0

நடமாடும் தடுப்பூசி நிலையங்களை(Mobile vaccination centers) விரைவாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.

உடல்நலக்குறைவினால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்களுக்காக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக COVID ஒழிப்பு விசேட குழுவுடன் நேற்று(16) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த சில நாட்களாக அடையாளம் காணப்பட்டுள்ள COVID நோயாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதனால், தடுப்பூசி ஏற்றுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும், இதுதொடர்பில் அறிவூட்டுவது தொடர்பிலும், தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு மக்களை உட்படுத்துவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here