நகங்களில் தோன்றும் மாற்றம்…. பிரித்தானிய மருத்துவர்களின் புதிய ஆய்வு

0

உலகளவில் கொரோனா தொற்று அறிகுறிகள் பல இனங்காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் நகங்களுக்கு குறுக்கே புதிதாக வெள்ளை நிற கோடுகள் அல்லது பள்ளங்கள் காணப்படுமாயின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதன் அறிகுறியாக இருக்கும் என பிரித்தானிய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நகங்களின் குறுக்கே கிடைமட்டமாக வெள்ளை நிறத்தில் தெளிவான கோடு வளர்ந்திருந்தால் அது ‘கோவிட் நகம்’ என்று அழைக்கப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் நகங்களில் இதுபோன்ற அறிகுறிகள் காணப்பட்டுள்ளது.

ஆனால் அதனால் பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும் தோல் மருத்துவர் Tim Spector தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த வரிகள் ஏற்படாது.

அதேபோல், நகங்களில் இதுபோன்ற கோடு வளர்ந்தாலே கொரோனா தான் என முடிவு செய்யமுடியாது.

ஊட்டச்சத்து குறைபாடு, தைராய்டு நோய், நீரிழிவு நோய் அல்லது இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகை போன்ற கடுமையான நோய்களால் நகத்தின் வடிவத்தில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படலாம் அல்லது வெள்ளை நிற கோடு ஏற்படலாம்.

பேராசிரியர் ஸ்பெக்டர் லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா வைரஸின் பொதுவான மற்றும் குறைவான பொதுவான அறிகுறிகளைக் கண்டறிய மக்களுக்கு உதவும் வகையில் Zoe Covid Symptom Study எனும் செயலியை உருவாக்கியுள்ளது.

இந்த App-ஐ மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் பயன்படுத்துவதுடன் மேலும் கொரோனாவால் மக்கள் எந்த வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு இது உதவியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here