தோழியை திருமணம் செய்யும் பெண்…! அதிர்ச்சியில் குடும்பத்தினர்

0

இந்தியாவில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் பரோமிதா முகர்ஜி மற்றும் சுரபிமித்ரா. நெருங்கிய தோழிகளான இவர்கள் ஒன்றாக படித்து மருத்துவர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்து ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து இருந்தமையால் அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஒன்றாக நாக்பூரில் மருத்துவர்களாக பணியாற்றி வந்த இவர்கள், ஒரே வீட்டில் ஒன்றாக கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்,

நாங்கள் இருவரும் ஓரின சேர்க்கையாளர்கள் என்பதை ஒளிவுமறைவின்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களுக்குள் நல்ல உறவு இருப்பதை கடந்த 2013-ஆம் ஆண்டே எனது தந்தையிடம் சொல்லி விட்டேன். சமீபத்தில்தான் எனது தாயாரிடம் இதை தெரிவித்தேன்.

இதைக் கேட்டு, முதலில் எனது தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

பிறகு எனது தந்தை மூலம் அவருக்கு புரிய வைத்தேன்.

இப்போது அவர்கள் இருவரும் நான் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று எனது திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் கடந்த 29-ஆம் திகதி நாக்பூரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here