ஐபிஎல் அணிகளுக்கான வீரர்கள் தேர்வு பெப்ரவரி 12 மற்றும் 13 திகதிகளில் நடைப்பெற்று முடிந்துள்ளது.
நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான IPL போட்டிகள் வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கவுள்ளது.
ஐபிஎல் போட்டிகளை நேரலையில் வழங்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம், ஐபிஎல் போட்டிகள் குறித்த விளம்பரத்தில் முன்னாள் இந்திய கேப்டன் தோனியை வைத்து படமாக்கி சில விளம்பர துணுக்கு காட்சிகளை வெளியிட்டுள்ளது.
இந்த விளம்பரத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா பட ஆட்டோக்காரன் கெட்-அப்பில் தோனி தோன்றிய ரசிகர்கள் கவர்ந்துள்ளார்.
முழு நீள விளம்பரம் இன்னும் வெளிவராதநிலையில் உள்ளது.
தோனியின் இந்த ஆட்டோக்காரன் கெட்-அப்பை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்று அதை இணையத்தில் வேகமாக பரப்பிவருகின்றனர்.