தொண்டமானாறு கடல் நீரேரியில் மிதந்து வந்த முதியவரின் சடலம் மீட்பு (Photos)

0

யாழ்.தொண்டமானாறு கடல் நீரேரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(26.09.2021) காலை 80 வயதான முதியவரொருவரின் சடலமொன்று கண்டறியப்பட்டுள்ளது.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு அருகில் தொண்டைமானாறு கடல் நீரேரியில் இன்று காலை சடலமொன்று மிதப்பதாக மீன்பிடிக்கச் சென்றவர்களால் அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்துச் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் நீரில் மூழ்கிய நிலையில் முதியவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதேவேளை, ஆலயத்துக்கு வருகை தந்த முதியவர் நீரேரியில் குளிக்க முற்பட்ட சமயம் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அச்சுவேலிப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here