தொடர்ச்சியாக ராஜினாமா செய்யும் உதவியாளர்கள்..! போரிஸ் ஜான்சன் அதிருப்தி

0

பிரித்தானியாவில் பிரதமர் அலுவலகத்தில் போரிஸ் ஜான்சனின் உயர்மட்ட உதவியாளர்கள் நான்கு பேர், அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர்.

நேற்று மாலை, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் 14 வருடங்கள் உதவியாளராக பணியாற்றிவந்த, No.10 (பிரதமர் அலுவலகத்தின்) பாலிசி பிரிவின் இயக்குநராக இருந்த முனிரா மிர்சா (Munira Mirza) திடீர் ராஜினாமா செய்துள்ளார்.

அவர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே தகவல் தொடர்பு இயக்குநர் ஜாக் டாய்ல் (Jack Doyle) தனது ராஜினாமாவை உறுதிப்படுத்தினார்.

முனிரா மிர்சா, டான் ரோசன்ஃபீல்ட், மார்ட்டின் ரெனால்ட்ஸ் மற்றும் ஜாக் டாய்ல். PC: PA/Rex

அவர்களைத் தொடர்ந்து தலைமை அதிகாரி டான் ரோசன்ஃபீல்டு (Dan Rosenfield) மற்றும் மூத்த அரசு ஊழியர் மார்ட்டின் ரெனால்ட்ஸ் (Martin Reynolds) ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

தலைமை உதவியாளர்களின் ராஜினாமாக்கள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது கட்சிக்குள்ளேயே அவரது தலைமைத்துவம் குறித்து கேள்வி அதிகரித்து வருகிறது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் மீதான அழுத்தம் அதிகரித்துவருகின்றது.

இந்நிலையில், டவுனிங் தெருவிலிருந்து சில மணிநேரங்களில் அடுத்தடுத்து நான்கு உதவியாளர்கள் வெளியேறியது பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here