தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை செய்யும் வடகொரியா!

0

வடகொரியாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

இந்நிலையை கருத்திற்க் கொள்ளாது தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் வடகொரியா நேற்று ஒரே நாளில் 2 ஏவுகணைகளை ஏவி சோதித்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து 2 குரூஸ் ரக ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஏவுகணை சோதனை குறித்த கூடுதல் தகவல்களை அறிய தென்கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, வடகொரியா இந்த மாதத்தில் நடத்திய 5-வது ஏவுகணை சோதனை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here