தைவானில் அடுத்தடுத்து 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 7 ஆக பதிவானதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்கரை நகரங்களில் சராசியாக 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை இல்லை என அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நில நடுக்கம் சீனாவின் Guangdong மற்றும் புஜியன் மாகாணங்களிலும் உணரபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடங்கள் குலுங்கிய நிலையில் பாதுகாப்பு தேடி பொது மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
உயிர்சேதம் குறித்து விவரம் தெரிவிக்கப்படாத நிலையில் தைவானில் கட்டுமான பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.