இந்தியாவில் பீகார் மாநிலம் முசாஃபர்நகரை சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவர் மலசிக்கல் மற்றும் அடி வயிற்றில் வலியால் அவதிபட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் மலசிக்கல் மற்றும் அடி வயிறு வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அவரது வயிற்றில் ஏதோ பெரிய பொருள் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் அந்த பொருள் வயிற்றில் உள்ள குடல் பகுதியில் சிக்கி இருந்துள்ளது.
இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குடும்பத்தாரிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த முதியவர் டீ குடிக்கும் போது டம்ளரை விழுங்கியதாக கூறியுள்ளனர்.
பின்னர் டாக்டர்கள் அந்த பொருளை ஆசன வாய் வழியாக வெளியே எடுக்க முடிவு செய்து முயற்சித்தனர்.
ஆனால் அது வரவில்லை என்பதால் வேற வழியின்றி அறுவை சிகிச்சை செய்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு டம்ளரை வெளியே எடுத்துள்ளனர்.
இந்த டம்ளர் எப்படி இவர் குடலுக்குள் வந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.