தேசிய அடையாள அட்டை இலக்க முறைமையை பின்பற்றாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

இலங்கையில் அடையாள அட்டை முறைமைக்கு அமைய வெளியிடங்களுக்குச் செல்லாத 141 பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் முகக்கவசம் அணியாமை , சமூக இடைவெளியைப் பேணாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 10,000 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேல்மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை அடையாள அட்டை இலக்கத்திற்கமைய பொது மக்கள் வெளியில் செல்கின்றனரா என்பது தொடர்பில் அவதானிப்பதற்காக பொலிஸாரால் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது 11,408 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு , 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாணத்தின் எல்லைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையின் போது , 2,049 வாகனங்களில் பயணித்த 3,882 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here