தேசிய அடையாள அட்டை நடைமுறை மீண்டும் அமுல்…

0

பயண கட்டுப்பாடு அமுலில் இருக்கின்ற வேளையில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியில் செல்லு ம் நடைமுறை அமுலாகவுள்ளது.

அதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டுச் செல்லும் நடைமுறை நாளை (வியாழக்கிழமை) முதல் மே 31 வரை நடைமுறைக்கு வருகிறது.

எனவே அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 0, 2,4,6,8 ஐ கொண்டவர்கள் இரட்டை நாட்களில் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

இறுதி இலக்கமாக 1,3,5,7,9 உள்ளவர்கள் ஒற்றை நாட்களில் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, அடையாள அட்டை இல்லாதவர்கள் கடவுச்சீட்டு அல்லது வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும் என்றும் அறிவித்துள்ளார்.

வேலைக்கு செல்பவர்கள், அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்கள் அல்லது மருத்துவ சேவைகளை வாங்குபவர்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தாது என்றும் அவர் கூறினார்.

வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அல்லது மருத்துவ தேவைக்காக வீட்டை விட்டு வெளியேற விரும்புவோருக்கு இது பொருந்தும் என்றும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொருவரும் அவர்களின் அடையாள அட்டையை கொண்டு செல்வது அத்தியாவசியம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here