தெல்லிப்பழை துர்க்காதேவிக்கு 10 ஆம் திகதி கொடியேற்றம்

0

வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும்-10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் நடைபெறவுள்ளது.

தற்போதைய கொரோனாத் தொற்றுப் பரவல் நிலைமையைக் கருத்திற் கொண்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சுகாதாரத் துறையினரின் முழுமையான ஆலோசனையின் பிரகாரமே இவ்வாண்டு மஹோற்சவத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெறும் என தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.

மஹோற்சவத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் ஆலய நிர்வாக கூட்டம் எதிர்வரும்-08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் குறித்த கூட்டத்தில் இதுதொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here