தென்னாபிரிக்க திரிபு இலங்கையில் பரவும் ஆபத்து!

0

தென்னாபிரிக்காவில் இனங்காணப்பட்ட புதிய திரிபு குறித்து இலங்கை சுகாதார திணைக்களத்தினர் எச்சரிக்கையாக உள்ளனர்.

இந்தத் திரிபு இதுவரை கண்டறியப்பட்ட திரிபுகளின் பிந்தைய பிறழ்வாக இருக்கலாம்.

அத்துடன், கொவிட் -19 தடுப்பூசிகளின் திறனைப் பாதிக்க வல்லதாக இருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

சுகாதாரத் திணைக்களம் மேலும் கூறுகையில், இலங்கையில் இந்த வகை திரிபு கண்டறியப்பட வில்லை. ஆனால், உலகளவில் வேகமாக பரவி வருவதால் அது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையுடன் உள்ளது.

ஆய்வின்படி, தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்தத் திரிபு சி.1.2 ஆகும். இது மற்றைய திரிபுகளையும் விட அதிவேகமாகத் தொற்றக் கூடியது.

தற்போது கிடைக்கும் தடுப்பூசிகளின் திறனை தவிர்க்கவல்லதாக இருக்கலாம். இந்தத் திரிபு – சி.1.2, டெல்டா திரிபை விட ஆபத்தானதா என்பதை
விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here