தென்னாபிரிக்கா கொரோனா தொற்றால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து

0

தென்னாபிரிக்காவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் மரபணு இலங்கையில் பரவினால் மூன்றாவது கொரோனா அலை ஏற்படும் ஆபத்து உள்ளது.

இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்து எச்சரித்துள்ளார்.

பொதுவான கொவிட் -19 தொற்றினை கட்டுப்படுத்தும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி திறன் தென்னாப்பிரிக்க திரிபினை அடக்குவதற்கு இல்லை.

இதனால் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நபர்களும் தென்னாபிரிக்க வைரஸ் தொற்றுக்குள்ளாக கூடும்.

இந்த வைரஸ் பரவினால் தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் உயிரிழப்புக்களின் அளவும் அதிகரிக்க கூடும்.

இந்த திரிபினை கட்டுப்படுத்துவதற்காக ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனிகா தடுப்பூசி போதுமானதில்லை என விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here