தென்இந்திய அளவில் நடிகை சமந்தாவிற்கு கிடைத்த கௌரவம்!

0

கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் உரையாற்றுவதற்கு நடிகை சமந்தா அழைக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் கோவா திரைப்பட விழாவில் பேசும் முதல் தென்இந்திய திரைப்பட நடிகை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருவபவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் தனது காதல் கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக தகவல் வெளியிட்டு இருந்தார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அவர் ஆன்மீகச் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் சினிமாவிற்கு சிறிது இடைவெளி விடுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் நடிகை சமந்தாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகின்றன. அந்த வகையில் நடிகை டாப்ஸி புதிதாக துவக்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் புதுப்படம் ஒன்றில் நடிகை சமந்தா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கவிருக்கும் புதுப்படத்திலும் நடிகை சமந்தா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள “சாகுந்தலம்” மற்றும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோவாவில் வரும் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிவரை சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நடிகை சமந்தா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் கோவா திரைப்பட விழாவில் பேசப்போகும் முதல் தென் இந்திய நடிகை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்து ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here