சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில், பணியில் இல்லாதபோதும் சீருடையில் இருந்த பொலிசார் குடித்துவிட்டு கலாட்டா செய்து, பொதுமக்களை தொந்தரவு செய்து கொண்டிருந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அவர் தனது துப்பாக்கியை எடுத்துக் காட்டி பொதுமக்களை மிரட்டியுள்ளார்.
அவரது சக பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள இயலாது என்று கூறியுள்ள பொலிஸ் செய்தித்தொடர்பாளர் இது பொலிஸ் துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல் என்று கூறியுள்ளார்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பொலிசார் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.