இலங்கையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் பலி: மூவர் கைது

0

வீரக்கெட்டிய – வேகந்தவல பகுதியில் தந்தை ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டார்.

நேற்றிரவு 10.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் உறவினர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் பிரதான சந்தேகநபரான சிறுவனின் உறவினர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here