துபாய் துறைமுகத்தில் பரபரப்பு…. தீப்பற்றி எரியும் கப்பல்!

0

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்தில் சரக்கு கப்பலில் தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முதற்கட்ட தகவலில் Jebel Ali துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில், ஒரு பெட்டகமே வெடித்து தீப்பற்றியுள்ளது.

மேலும், அந்த பெட்டகம் வெடித்த சத்தம் மொத்த நகரத்தையும் உலுக்கியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

பலர் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை பதிவேற்றி வருகின்றனர்.

இதுவரை விபத்துக்கான காரணம் தொடர்பில் உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

மேலும், இச்சம்பவத்தால் எந்த உயிர் ஆபத்தும் ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாகாண தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here