துனிசியாவில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…

0

வட ஆப்பிரிக்கா நாடான துனிசியாவில் இரு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

துனிசியா தலைநகர் துனிஸில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

jebel Jelloud பகுதியில் தெற்கு புறநகர்ப் பகுதியிலிருந்து வந்த ரயிலுக்கும், மற்றொரு பிரதான பகுதியிலிருந்து வந்து ரயிலுக்கும் இடையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 95 பேர் காயமடைந்துள்ளனர்.

பலர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், பலருக்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துனிசியாவைச் சேர்ந்த Souhail Abbes என்ற நபர், விபத்திற்கு பிறகு சம்பவயிடத்திலிருந்து பேஸ்புக் நேரலையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here