அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த லெஸ்பியன் தம்பதியின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த தம்பதி சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் துப்பாக்கியால் சுட்டு கொன்றதன் பின்னர், சடலத்தை துண்டு துண்டாக வெட்டியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொல்லப்பட்டவர்கள் Nohemí Medina Martínez மற்றும் Yulizsa Ramírez என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை ஜுரேஸ்-எல் போர்வெனிர் சாலையில் 17 மைல்கள் இடைவெளியில் அவர்களின் உடல்கள் அடங்கிய பைகள் கண்டெடுக்கப்பட்டன.
குடும்பத்தினரை சந்திக்கும் பொருட்டே இருவரும் மெக்சிகோ சென்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இருவரும் மெக்சிகன் குடிமக்கள் எனவும், ஆனால் டெக்சாஸ் மாகாணத்தில் குடியிருந்து வந்துள்ளனர்.
2021ல் திருமணம் செய்து கொண்ட இருவரும் மூன்று குழந்தைகளுக்கு தாய்மார்கள் என தெரிய வந்துள்ளது.
Ciudad Juárez நகரத்தை பொறுத்தமட்டில் 2021ல் 1,424 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2020ல் இந்த எண்ணிக்கை 1,507 என பதிவாகியுள்ளது.
பொதுவாக மெக்சிகோவில் தன்பாலின மக்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டு வருவதாகவே கூறப்படுகிறது.
தற்போது கொல்லப்பட்ட இந்த லெஸ்பியன் தம்பதி விவகாரத்திலும் அதே நிலை ஏற்படுமா என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.