தீ விபத்தில் சிக்கிய லண்டனில் பிரபல நடிகை….

0

கிழக்கு லண்டனில் Ilford பகுதியில் உள்ள Windsor சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில், பழம்பெரும் நடிகை Anna Karen-ன் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர்.

அப்போது, நடிகை Anna Karen இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக உறுதிசெய்தனர்.

70-களில் புகழ்பெற்ற நடிகையாக வளம் வந்த Anna Karen, 1936-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்.

அவர் தனது 17-வது வயதில் லண்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

லண்டனுக்குச் சென்ற பிறகு அவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் டிராமாடிக் ஆர்ட்டில் சேர்ந்து நடிப்பை பயின்றார்.

1961-ஆம் ஆண்டில், அவர் நேச்சரிஸ்ட் திரைப்படமான Nudist Memories மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

1967-ல் Ken Loach-சின் திரைப்படமான Poor Crow-ல் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.

பின்னர், 1969-ல் Carry on Camping-ல் Barbara Windsor-உடன் நடித்தார்.

பின்னர், பிரிட்டிஷ் காமெடி திரைப்படமான On the Buses மூலம் புகழ்பெற்றார்.

கேரன் 1967-ல் நகைச்சுவை நடிகர் Terry Duggan மணந்தார்.

மேலும் அவர் இறக்கும் வரை வின்ட்சருடன் நட்பாக இருந்தார்.

கடந்த ஜனவரியில் வின்ட்சரின் இறுதிச் சடங்கில் அவர் தனது கடைசியாக பொதுவெளியில் தோற்றமளித்திருந்தார்.

அவரது மரணம் தற்போது பிரித்தானியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here