தீவிர சிகிச்சை பிரிவில் லதா மங்கேஷ்கர் அனுமதி

0

இந்திய திரையுலகின் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி இசை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி, தமிழ் உள்பட கிட்டதட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட வெளிநாட்டு மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடியவர் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் என்பதும் இவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

92 வயதாகும் லதா மங்கேஷ்கர் அவர்கள் தனது 13ஆம் வயதில் இருந்து சுமார் 70 ஆண்டுகளுக்கும் பாடியுள்ளார் என்பதும், கடந்த சில ஆண்டுகளாக அவர் ஓய்வு எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவருக்கு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதாகவும் இதனை அடுத்து அவருக்கு கொரோனா வைரஸ்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் லதா மங்கேஷ்கர் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here