தமிழகம் திருச்சி முகாமில், கடந்த 35 நாட்களாக இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதில் நபர் ஒருவர் நேற்றைய தினம் உயிரை மாய்க்க முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் முகாமில் உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு தீ குளித்து உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.
தற்பொழுது எரிகாயங்களுடன் மிகவும் வேதனையான நிலையில் வைத்தியசாலையில் உள்ளார் .
மேலும் அந்த அகதிகள் ”இன்னுமா எங்களுடைய விடுதலையின் அழுகுரல் யாருக்கும் கேட்கவில்லை. எங்கள் மனதில் ஓல சத்தம் இன்னுமா உங்கள் இரக்கங்களை தொடவில்லை. இன்னுமா எங்கள் வெந்து போன வேதனைகள் உங்கள் இதயங்களை காயப்படுத்தவில்லை.
ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் நாங்கள் இந்த போராட்டத்தில் இறந்து போனால் எங்கள் உடல்களை ஆவது எந்தவித கெடுபிடியும் இல்லாமல் தாமதப்படுத்தாமல் உடல்கள் அழுகிப் போகும் வரையும் விடாமல்,எங்கள் உறவுகளிடம் எங்கள் உடல்களை தகனத்திற்காக கொடுத்து விடுங்கள்.” என தெரிவித்தனர்.