தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மாகாணங்களின் ஆளுநர்களினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மாகாணத்தில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவும் அதேநேரம், தீபாவளிப் பண்டிகையும் இடம்பெறுகின்றது.

எனவே, சிறுவர்களின் உள ஆரோக்கியம் மற்றும் பண்டிகை என்பவற்றைக் கருத்தில்கொண்டு வெள்ளிக் கிழமை விடுமுறை வழங்கப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த, ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளிலும், ஆரம்பப்பிரிவுகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்பட்டன.

இந்நிலையில், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக 10 ஆம் தரத்துக்கு மேற்பட்ட அனைத்து தரங்களுக்கும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here