தீக்கிரையாகிய 5 முதியவர்கள்…. ஸ்பெயினில் நடந்த கொடூரச் சம்பவம்…

0

ஸ்பெயினின் கிழக்கு பகுதியிலுள் முதியோர் இல்லத்தில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதில் ஐவர் பலியானதோடு 25 பேர் காயமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

தீப்பரவல் ஏற்பட்ட கட்டத் தொகுதியிலிருந்து புகையை சுவாசித்த 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் வெளியான நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஸ்பெயின் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here