
பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) ஜனாதிபதி கோட்டாபயவிடம் (Gotabaya Rajapaksa) அறித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் (09-05-2022) போராட்டக் களத்திற்கு வன்முறையை துண்டிவிட்ட மஹிந்தவால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.