தி.மு.க.வின் வெற்றியை கொண்டாட வேண்டாம்…! மு. க. ஸ்டாலின் வேண்டுகோள்

0

இந்தியாவில் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6 ஆம் திகதியன்று நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

தற்போது தி.மு.க தலைமையிலான கூட்டணி 152 தொகுதிகளிலும், அ.தி.மு.க கூட்டணி 81 தொகுதிகளில் முன்னணி பெற்றிருக்கிறது.

கொரோனா காலகட்டத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு கொண்டாட வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் திரண்டனர்.

இந்த கூட்டத்தை தடுக்கத் தவறியதற்காக தேனாம்பேட்டை பொலிஸ் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது-.

இந்நிலையில் தி.மு.க.வின் தலைவரான ஸ்டாலின்,’வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.

முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரவேண்டாம்.

வெற்றி சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் தலைமையை தொடர்பு கொள்ளவும்.

கொரோனால் தொற்றின் காரணமாக வெற்றி கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும், வீதிகளில் கொண்டாட வேண்டாம் என்றும் வீட்டிற்குள்ளேயே கொண்டாடுங்கள் என்றும் மு. க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here