திரைப்படமாகும் 90-ஸ் கிட்ஸின் ”சக்திமான்”

0

90-களின் காலக்கட்டத்தில் மிக முக்கியமான தொடர் “சக்திமான்”. பல குழந்தைகளை கவர்ந்த இந்த தொடர் 1997-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இந்தத் தொடரை நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்து நடித்திருந்தார். தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பான இந்த தொடர் பல ரசிகர்களை தன் வசம் படுத்தியிருந்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அச்சமயம் சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல முன்னணி தொடர்களை முந்தி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டது. அந்த அளவிற்கு இத்தொடர் பல ரசிகர்களை கவர்ந்திருந்தது.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு சக்திமான் தொடர் திரைப்படமாக தயாராக இருக்கிறது. சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் இந்திய முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். இது தொடர்பாக சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் பல அபிமான தொடர்கள் திரைப்படமாக்கப்பட்டு உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் நடிகர் முகேஷ் கண்ணாவின் சக்திமான் தொடர், தற்போது படமாக உருவாகவுள்ளது” என்று குறிப்பிட்டு அத்துடன் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here