திரெளபதி இயக்குனரின் அடுத்தபட அறிவிப்பு இன்று !

0

பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் அதன்பின் திரெளபதி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார் என்பது தெரிந்ததே

இந்த படம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் அதனை அடுத்து ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் இந்த படமும் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் மோகனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனது அடுத்த திரைப்படம் பற்றிய ஒரு அறிவிப்பு இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு என்று மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருடைய அடுத்தப் படமும் சர்ச்சைக்குரிய படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here