அமெரிக்காவில் 15 ஆம் திகதி நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் 58 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாண்டில் 35 ஆவது திருமதி உலக அழகிப் போட்டி இடம்பெற்றுள்ளது.
அதில் திருமதி உலக அழகியாக அமெரிக்கா சார்பில் போட்டியிட்ட சைலின் ஃபோர்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் இலங்கை சார்பில் புஷ்பிகா டி சில்வா கலந்து கொண்டார்.
கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு தாமரை தடாக அரங்கில் இடம்பெற்ற திருமதி இலங்கை அழகிப் போட்டியில் கிரீடம் வழங்கப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த நிகழ்வு சர்ச்சைக்குள்ளானதுடன், அவருக்கு மீண்டும் கிரீடம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.