திருமதி இலங்கை உலக அழகிப் போட்டியில் குழப்பம்! வெற்றியாளர் தகுதி நீக்கம்

0

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்று (04) நடைபெற்ற திருமதி இலங்கை உலக அழகிப் போட்டி நிகழ்ச்சியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நாட்டில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

போட்டியாளர் இல 20, திருமதி புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, நிகழ்வின் பிரதம விருந்தினரால் கிரீடம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்.

பிரதம விருந்தினர்களால் கிரீடம் வழங்கப்பட்ட பின் முன்னாள் திருமதி உலக அழகிப் பட்டத்தை வென்ற கரொலின் ஜூரி வெற்றி பெற்ற போட்டியாளர் அதற்கு தகுதியற்றவரென அறிவித்துள்ளார்.

போட்டியாளர் திருமணமானவராக இருக்க வேண்டும் என்பதோடு விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என்பதே அதற்கான காரணமாகும்.

அதன் பின் சில நிமிடங்களுக்கு முன்பு கிரீடம் வழங்கப்பட்ட வெற்றியாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here