பலங்கொட மிரிஸ்வத்தை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வில் உணவு சரியில்லை என கூறப்பட்டால் மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து பலங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திருமண நிகழ்வில் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
கொழும்பை சேர்ந்தவர்கள் திரும்பி செல்லும் போது, அதில் ஒருவர் திருமணத்தில் உணவு மிகவும் மோசமாக இருந்ததென உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக உணவு ஏற்பாடு செய்தவருடன் உறவினர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.