திருமண மேடையில் மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

0

இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம் பவுர்வா சுமார்பூர் பகுதியில், சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

ஒரு தாமரை போன்ற செட்டிங் கொண்ட வித்தியாசமான திருமண மேடையில் மணப்பெண் மற்றும் மணப்பெண் உட்கார்ந்திருந்தனர்.

அப்போது திடீரென்று திருமணமேடையில் ஏறிய தாய் மணமகனை செருப்பால் கண்ணத்தில் அரைந்த சம்பவம் அங்கிருந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, மணமகனும், தன்னுடைய மகனுமான உமேஷ் சந்திரா வேறு ஜாதிப் பெண்ணை, பெண் வீட்டாரின் விருப்பதை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஏற்கனவே பதிவு திருமணம் செய்துவிட்டு, இப்போது வெறும் சடங்கிற்காக இப்படி செய்வதாகவும், இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த நான் அவனை செருப்பால் அடித்ததாக கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here