திருமண பரிசாக பெட்ரோலை கொடுத்த நடிகர் மயில்சாமி

0

தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மயில்சாமி. இவர், அண்மையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக அளித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் இவ்வாறு செய்துள்ளார். இது திருமணத்துக்கு வந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து நடிகர் மயில்சாமி கூறியதாவது: “பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காகத் தான் இவ்வாறு செய்தேன். தமிழக அரசு பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்ததை வரவேற்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here