இந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள, குஷிநகர் நெபுவா நவுராங்கியா பிரதேசத்தில் திருமண நிகழ்வொன்றில் இடம் பெற்றது.
நேற்றிரவு 8.30 அளவில் சிறுமிகள், பெண்கள் உள்ளடங்களாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 7 பெண்களும், ஒரு வயது குழந்தை மற்றும் 10 வயது சிறுமியொருவர் உட்பட 6 சிறுவர்களும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சிலர், அங்கிருந்த கிணற்றின் மேல் இடப்பட்டிருந்த கொங்க்ரீட் தளத்தின் மீது நின்றுக் கொண்டிருந்துள்ளனர்.
அது உடைந்து வீழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிக பாரத்தினால், கிணற்றின் மேல் காணப்பட்ட கொங்க்ரீட் தளம் உடைந்து அதன் வீழ்ந்ததால் அதன்மீது நின்று கொண்டிருந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 இலட்சம் ரூபா (இந்திய நாணய மதிப்பில்) இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.