திருமணம் நடந்த ஒரே நாளில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த கதி….

0

இந்தியாவில் தெலங்கானா மாநிலம் மெஹபூப் நகரை சேர்ந்த லட்சுமி மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோரது திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக இரவு திருமண சடங்குகள் மற்றும் பாட்டுக் கச்சேரி, நடன நிகழ்ச்சிகள் ஆகியவை திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றன.

அப்போது நடன நிகழ்ச்சியில் மணமகன் மல்லிகார்ஜுனா உடன் இணைந்து மணப்பெண் லட்சுமி மகிழ்ச்சியுடன் நடனம் ஆடினார்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

மாலையில் கழிவறைக்கு சென்ற மணப்பெண் லட்சுமி நீண்டநேரமாக வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து திறந்தனர்.

அப்போது லட்சுமி சுயநினைவின்றி கீழே விழுந்து கிடப்பதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் லட்சுமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில், லட்சுமி தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததும், அதனால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here